தபால் ஊழியர்கள் 2 பேர் பரிதாப சாவு


தபால் ஊழியர்கள் 2 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 8 Jun 2021 1:07 AM IST (Updated: 8 Jun 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது தபால் ஊழியர்கள் 2 பேர் பரிதாப சாவு

துமகூரு:

துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா சாகரனஹள்ளி கேட் அருகே நேற்று அதிகாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் வந்த ஒரு லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. 

லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டார்கள். மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் வெளியேறி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தார்கள். 

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்கள்.

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பீரூர் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரா (வயது 30) மற்றும் பிரியா (25) என்று தெரிந்தது. இவர்கள், தபால்துறையில் ஊழியராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து குப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story