பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு
பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனை கைதி இறந்தார்.
நெல்லை, ஜூன்:
தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 75). இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலைய பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செல்லத்துரைக்கு தூத்துக்குடி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிறையில் செல்லத்துரைக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைதி சாவு குறித்து நெல்லை உதவி கலெக்டரும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story