கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்
கையெழுத்து இயக்கத்தை நடத்தக்கூடாது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்
பெங்களூரு:
முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் எடியூரப்பா நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் எடியூரப்பா, பா.ஜனதா மேலிடம் விரும்பினால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
எடியூரப்பாவின் இந்த கருத்து, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பரவல் காரணமாக மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். அதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.
கையெழுத்து இயக்கத்தை நடத்துவதோ அல்லது அரசியல் நிலவரம் குறித்து பேசுவதோ கூடாது. கஷ்டத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story