தளர்வால் திருச்சியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன


தளர்வால் திருச்சியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன
x
தினத்தந்தி 8 Jun 2021 2:17 AM IST (Updated: 8 Jun 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்குடன் கூடிய கூடுதல் தளர்வால் திருச்சியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன

திருச்சி
கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10-ந் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கும், அதனைத் தொடர்ந்து ஜூன் 6-ந் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழக அரசு அறிவித்தது. இதனையொட்டி திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.  பல இடங்களில் தள்ளுவண்டியில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையும் வழக்கம்போல நடந்தது. முகக்கவசம் அணிந்து சென்றாலும், பொருட்கள் வாங்கும் இடத்தில் சமூக இடைவெளி மட்டும் கடைபிடிக்கப்படவில்லை.



Next Story