மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மீன் மார்க்கெட் செயல்படத் தொடங்கியது
திருச்சி
தமிழகத்தில் நேற்று முதல் குறிப்பிட்ட மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவற்றில் காய்கறி கடை, மளிகைக்கடை மற்றும் இறைச்சி- மீன் கடைகள் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திருச்சி உறையூர் காசிவிளங்கி பகுதியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.அதன்படி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. அதேவேளையில் அங்கு மீன்களை வாங்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டதால் குறைந்த அளவே கூட்டம் காணப்பட்டது.
மத்திய பஸ் நிலையத்தில் மீன் விற்கப்படுவதை அறிந்து, பொதுமக்கள் பலரும் அங்கு வந்தனர். ஆனால், அவர்களை போலீசார் அனுமதி இல்லை என எச்சரித்து திரும்ப அனுப்பினர். இதனால், மீன்கள் விற்பனையின்றி மந்தமாக காணப்பட்டது. மேலும் மொத்தம் உள்ள 22 கடைகளில் நேற்று குறைந்த அளவிலான மீன் விற்பனை கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன.

Related Tags :
Next Story