தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்
தொட்டியம்
தொட்டியம் அருகே உள்ள வடக்கு அரங்கூர் முல்லை நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வள்ளி (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று அதே பகுதியில் உள்ள தனது அப்பா வீட்டில் குளியலறையில் வள்ளி தூக்குப் போட்டுக் கொண்டார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வள்ளிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் முசிறி சப்-கலெக்டர் ஜோதி சர்மா விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story