ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு


ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Jun 2021 2:52 AM IST (Updated: 8 Jun 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் மாலை 6 மணிக்கு மேல் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் விதிமுறைகளை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். வாகனங்களில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

Next Story