பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்


பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 8 Jun 2021 7:16 PM IST (Updated: 8 Jun 2021 7:16 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கொடைக்கானல்:

கொடைக்கானல் தாலுகா கூக்கால் ஊராட்சியை சேர்ந்த பெருங்காடு கிராமத்தில் தனியார் பங்களிப்புடன், 115 பழங்குடியின மக்களுக்கு அரிசி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

 விழாவுக்கு, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

மேலும் பொதுமக்களுக்கு முக கவசம், கை கழுவும் திரவம் ஆகியவற்றை வழங்கினார். இதேபோல் நக்சல் தடுப்பு போலீசாருக்கு கொரோனா தடுப்பு உடைகள் ஆகியவை வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் மற்றும் பல்வேறு தனியார் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Next Story