திருவாரூரில் இருந்து தேனிக்கு பொது வினியோக திட்டத்துக்காக 2 ஆயிரம் டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து தேனிக்கு பொது வினியோக திட்டத்துக்காக 2 ஆயிரம் டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்:-
திருவாரூரில் இருந்து தேனிக்கு பொது வினியோக திட்டத்துக்காக 2 ஆயிரம் டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
நெல் கொள்முதல்
காவிரி டெல்டா மாவட்டங்களுள் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு சாகுபடி பருவத்திலும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல், அரசின் அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் அரிசி, அந்தந்த இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுவது வழக்கம்.
தேனிக்கு 2 ஆயிரம் டன் அரிசி
இவ்வாறு இருப்பு வைக்கப்படும் அரிசி பொதுவினியோக திட்டத்துக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று திருவாரூரில் இருந்து தேனிக்கு 2 ஆயிரம் டன் அரிசி பொது வினியோகத்திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதையொட்டி திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன.
அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். 42 பெட்டிகளில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் சரக்கு ரெயில் 2 ஆயிரம் டன் அரிசியுடன் தேனிக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story