தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் தவணையை செலுத்த நெருக்கடி தரக்கூடாது கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்


தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் தவணையை செலுத்த நெருக்கடி தரக்கூடாது  கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jun 2021 9:24 PM IST (Updated: 8 Jun 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழு, பொதுமக்களிடம் கடன் தவணையை செலுத்த நெருக்கடி தரக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழு, பொதுமக்களிடம் கடன் தவணையை செலுத்த நெருக்கடி தரக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

கொரோனா தொற்று அதிகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் அவசர தேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மக்களிடம் மேற்படி கடன் மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்த கோரி, சில நிறுவனங்கள் மிரட்டுவதாகவும், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாகவும் புகார் வநத்து.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அனைத்து மண்டல வங்கியாளர், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

நெருக்கடி

கூட்டத்தில் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் கூறும் போது, கொரோனா காலத்தில் பொதுமக்கள், தொழில் செய்வோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் தவணை தொகையை திருப்பி செலுத்துவதில் சிரமம் உள்ளது. அவர்களை வற்புறுத்தி தொகையை செலுத்த அறிவுறுத்தப்படவில்லை. 

சுயஉதவிக்குழுவினர் தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தவணை தொகை செலுத்த முடியாதவர்களிடம் தவணை தொகையை செலுத்த நெருக்கடி கொடுக்கவில்லை என்று கூறினர்.

புகார் இன்றி..

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடனுக்கான தவணை தொகையை திரும்ப செலுத்த அறிவுறுத்தும் கடின போக்கை தவிர்க்க வேண்டும். 

பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கடன் தவணையை செலுத்த நெருக்கடி தரக்கூடாது. எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

Next Story