தடுப்பூசி குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு: தூத்துக்குடி சிறுமிக்கு கலெக்டர் பாராட்டு


தடுப்பூசி குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு:   தூத்துக்குடி சிறுமிக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 8 Jun 2021 10:02 PM IST (Updated: 8 Jun 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டி பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டி பரிசு வழங்கினார்.

கொரோனா தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

அதன் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

விழிப்புணர்வு

அதன்படி கடந்த வாரம் தூத்துக்குடியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி புனிதா என்பவர் மூலம் ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் சிறுமி புனிதா, நாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு எனது தந்தை தடுப்பூசி போட்டு உள்ளார்.

ஆகையால் எல்லோரும் கண்டிப்பாக தடுப்பூசி போடுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலானி வருகிறது. பொதுமக்களிடையும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

பாராட்டு

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று சிறுமி புனிதாவை கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்தார். அங்கு அவரை பாராட்டி பரிசு பொருட்களை வழங்கினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, சிறுமியின் பெற்றோர் மாயாண்டி, ஜென்சி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Next Story