தேனி உள்பட 70 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தேனி உள்பட 70 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2021 10:06 PM IST (Updated: 8 Jun 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து தேனி உள்பட 70 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அதை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பெத்தாட்சி ஆசாத் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
போடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
இதேபோல் அல்லிநகரம், பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர், போடி, கம்பம், உத்தமபாளையம் உள்பட மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story