போடி அருகே விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை


போடி அருகே விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 8 Jun 2021 10:10 PM IST (Updated: 8 Jun 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

போடி:
போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி சவுடம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வனராஜ் (வயது 43). இவர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் குடும்பத்துடன் தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊரான சில்லமரத்துபட்டிக்கு தனியாக வந்தார். 
பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக வனராஜூவால் மங்களூருவுக்கு திரும்பி செல்ல முடியவில்லை. மேலும் குடும்ப செலவுக்கும் அவரால் பணம் அனுப்ப இயலவில்லை. இதனால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு குடும்ப செலவிற்கு பணம் தரக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வனராஜ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story