கொரோனா பாதிப்பால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலை மூடப்பட்டது


கொரோனா பாதிப்பால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலை மூடப்பட்டது
x
தினத்தந்தி 8 Jun 2021 10:13 PM IST (Updated: 8 Jun 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலை மூடப்பட்டது. மேலும் நடைபாதைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

கொரோனா பாதிப்பால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலை மூடப்பட்டது. மேலும் நடைபாதைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது.

16 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது. இருப்பினும் தினமும் 500 பேருக்கு மேல் தொற்று உறுதியாகி வருகிறது. இந்த நிலையில் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரி அருகே வசிப்பவர் ஒருவர் கர்நாடகா மாநிலம் மைசூர் சென்று திரும்பினார். 

அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து சுகாதார குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தினர்.

இதில் அறிகுறி தென்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே பகுதியில் அதிகம் பேருக்கு தொற்று உறுதியானதால் அப்பகுதியை சுற்றிலும் உள்ள இடங்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

அரசு ஆஸ்பத்திரி சாலை அடைப்பு

அதன்படி நேற்று ஊட்டி அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலை இருபுறங்களிலும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. மேலும் அங்கு தடை செய்யப்பட்ட பகுதி என்று பேனர் கட்டப்பட்டது. வெளிநபர்கள் உள்ளே செல்லவும், உள்ளே வசிப்பவர்கள் வெளியே செல்லவும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் புளுமவுண்டன் பகுதி மற்றும் அப்பர் பஜாரில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் 2 நடைபாதைகள் தடுப்புகள் கொண்டு அடைத்து வைக்கப்பட்டு உள்ளது.

 அப்பகுதியில் வசிப்பவர்கள் 14 நாட்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஊட்டி நகராட்சி அலுவலகத்தையொட்டிய பகுதியில் 20 பேருக்கு மேல் கொரோனா உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story