குன்னூர் பஸ் நிலையத்தில் பழங்கள், காய்கறி கடைகள் வைக்க தடை
குன்னூர் பஸ் நிலையத்தில் பழங்கள், காய்கறி கடைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரங்கில் 7-ந் தேதி முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் குன்னூர் பஸ் நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்று (புதன்கிழமை) முதல் குன்னூர் பஸ் நிலையத்தில் பழங்கள், காய்கறி மற்றும் மளிகை கடைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், குன்னூரில் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் குவிந்தனர்.
இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, இங்கு கடைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் மீண்டும் வாகனங்களில் வைத்து விற்பனை செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story