பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த பணியாளர் சாவு


பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த பணியாளர் சாவு
x
தினத்தந்தி 8 Jun 2021 10:26 PM IST (Updated: 8 Jun 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த பணியாளர் பரிதாபமாக இறந்துபோனார்.

பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டையை சேர்ந்த ராமன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 27). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். 
இந்தநிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் கும்பக்கரை சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்றில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் நேற்று இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story