கொரோனா தடுப்பூசி மக்களுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு


கொரோனா தடுப்பூசி மக்களுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 8 Jun 2021 10:47 PM IST (Updated: 8 Jun 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி மக்களுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

திருப்பூர்
கொரோனா தடுப்பூசி மக்களுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
தேவையான குடிநீர்
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு 54 சதவீதத்தில் இருந்து தற்போது 8 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு வாகனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர, நகர பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி
மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் அடுக்குமாடி வாகன நிறுத்தம், பழைய பஸ் நிலையம், கலையரங்கம் ஆகிய பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி அதிகம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறார். இந்த வாரத்தில் தடுப்பூசி வந்ததும் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். கொரோனாவால் இறப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும்போது உள்ளது உள்ளபடி சான்றிதழ் வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறக்கும் படைகள்
திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் 100 குடும்பத்தினருக்கு ஒருவர் வீதம் களப்பணியாளர் குழு நியமிக்கப்பட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதுபோல் மாநகர பகுதியில் 2 கவுன்சிலிங் மையம் அமைக்கப்பட்டு தினமும் 2,400 பேரிடம் தொலைபேசியில் பேசி மருத்துவ தேவைகளை கேட்டறிந்து வருகிறார்கள்.
பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் விதிமீறலை கண்டறிய பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story