6 கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது
6 கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது
கணபதி
கோவை அருகே 6 கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது செய்யப் பட்டனர். இதில் தப்பி ஓடியவரை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கஞ்சா விற்பனை
கோவையை அடுத்த கணபதி ஒத்தபுளியமரம் பகுதியில் சரவணம் பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அங்கு வாலிபர்கள் சிலர் கும்ப லாக நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
உடனே போலீசார் விரட்டி சென்று அதில் 3 பேரை மடக்கி பிடித்த னர். ஒரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோவை ஆவாரம்பாளை யம் சவுடேஸ்வரி் நகரை சேர்ந்த நிதின் (வயது24), கணபதி ஜெயபிர காஷ் நகரை சேர்ந்த பிரகாஷ் (23), கணபதி ராஜவீதியை சேர்ந்த பிரக தீஸ்வரர் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 3 செல்போன்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே போலீசாரிடம் இருந்து கண பதிபுதூரை சேர்ந்த பார்த்திபன் (23) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
கத்திக்குத்து
இந்த நிலையில், கணபதி பகுதியில் நின்று கொண்டிருந்த பார்த்தி பனை, 4 பேர் கொண்ட மர்மகும்பல் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது. படுகாயம் அடைந்த பார்த்திபனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்று பார்த்திபனிடம் விசாரணை நடத்தினர்.
இதில், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பார்த்திபன் கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய ராஜேஷ், சபரி உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story