இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவை
பெட்ரோல் விலை லிட்டர் ரூ.50 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.40 ஆக குறைக்க வேண்டும், தமிழக அரசு கேட்கிற கொரோனா தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோவை ஜீவா இல்லம் முன்பு நேற்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கட்சியின் மாநில பொருளாளர் எம். ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் முன்னிலை வகித்தார்.
இது போல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பி.என்.புதூர் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் கட்சியினர் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story