காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழக- கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
நீர்வரத்து அதிகரிப்பு
அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story