தீவுகளில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திய வனத்துறையினர்


தீவுகளில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திய வனத்துறையினர்
x
தினத்தந்தி 8 Jun 2021 11:46 PM IST (Updated: 8 Jun 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

தீவுகளில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திய வனத்துறையினர்

பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இதில் மண்டபம் வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் ஏழு தீவுகள் உள்ளன. இந்த நிலையில் உலக கடல் நாள் தினத்தை முன்னிட்டு நேற்று மண்டபம் வனச்சரக கட்டுப்பாட்டில் பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு மற்றும் மண்டபம் அருகே உள்ள முயல் தீவு பகுதிகளில் வனத்துறையினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனவர்கள் தேவகுமார், மகேந்திரன் மற்றும் வன காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் தீவு பகுதிகளில் கிடந்த குப்பைகள், காகிதம் உள்ளிட்ட பொருட்களை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் தீவு மற்றும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கடந்த பிளாஸ்டிக் பாட்டில் பாலீதின் பைகளையும் அகற்றி சுத்தம் செய்தனர்.

Next Story