கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், சிறியவர் முதல் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும், செங்கல்பட்டில் இயங்கிவரும் மத்திய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தினை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல் ரூ.50 டீசல் ரூ.40 என்ற விலையில் விற்கும்படி வரிகளை குறைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகபூபதி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் நகர் செயலாளர் களஞ்சியம், மண்டபம் ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சண்முகராஜன், நாகராஜன், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம்
இதேபோல, ராமேசுவரத்தில் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமையிலும், தங்கச்சிமடத்தில் நகர் செயலாளர் ரவிச்சந்திரன், உப்பூரில் தாலுகா பொறுப்பாளர் தங்கராஜ், திருப்புல்லாணி ஒன்றியம் சார்பில் பெரியபட்டினத்தில் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், போகலூர் ஒன்றியம் சார்பில் சத்திரக்குடியில் மாவட்ட பொருளாளர் ஜீவா, பரமக்குடி எமனேசுவரத்தில் நிர்வாக குழு உறுப்பினர் ராஜன் தலைமையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story