பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி


பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என  வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி
x
தினத்தந்தி 9 Jun 2021 12:32 AM IST (Updated: 9 Jun 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை வால்பாறை நகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்.

வால்பாறை

பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை வால்பாறை நகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்.

கணக்கெடுக்கும் பணி 

வால்பாறையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக நகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி இங்குள்ள அரசு கல்லூரியில் படித்து வரும் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்த 70 மாணவ-மாணவிகள் தன்னார்வலர்களாக சேர முன்வந்தனர். 

அவர்களுக்கு வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடங்கி வைத்தார் 

இதையடுத்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர் களுக்கு முகக்கவசம் மற்றும் தேவையான பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை தொடங்கினார்கள். 

தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, இருமல் உள்ளதா? என்பது குறித்து கணக்கெடுப் பதுடன், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றையும் கணக்கெடுத்து வருகிறார்கள். 

அவர்களுடன் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட ஊழியர்களும் சென்றனர். 

முழு ஒத்துழைப்பு 

இது குறித்து நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் கூறும்போது, வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. 

எனவே வீடுகளுக்கு வரும் தன்னார்வலர் களுக்கு பொதுமக்கள் உண்மையான தகவலை தெரிவித்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 

இந்த நிகழ்ச்சியில் வால்பாறை தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி பாபுலட்சுமண், கல்லூரி முதல்வர் முரளிதரன், நகராட்சி துப்புரவு அதிகாரி செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story