பனியன் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சீல்


பனியன் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சீல்
x
தினத்தந்தி 9 Jun 2021 12:35 AM IST (Updated: 9 Jun 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

அனுப்பர்பாளையம் பனியன் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சீல்

அனுப்பர்பாளையம்
 திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் தலைமையில்  நேற்று வருவாய்துறை அதிகாரிகள் அங்கேரிபாளையம் ரோடு, பி.என்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள குவாலியன்ஸ் இன்டர்நேஷனல்  என்ற பனியன் ஏற்றுமதி நிறுவனம் அரசின் வழிமுறைகளை மீறி இயங்கியது தெரிய வந்தது.
மேலும் ஊரடங்கு உத்தரவு விதிமுறையின்படி 10 சதவீத ஊழியர்களுக்கு பதிலாக 30 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டதும் தெரியவந்தது. இதன்படி அந்த நிறுவனத்தில் 85 ஊழியர்கள் பணியில் இருந்தனர். இதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். 
இந்த ஆய்வின்போது வடக்கு தாசில்தார் ஜெகநாதன், மண்டல துணை தாசில்தார் சரவணன், நிலவருவாய் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். முழு ஊரடங்கில் இருந்து தமிழக அரசு தளர்வுகள் அளித்துள்ள நிலையில் திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் அதை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story