நாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் செத்தன.


நாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் செத்தன.
x
தினத்தந்தி 9 Jun 2021 12:39 AM IST (Updated: 9 Jun 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் செத்தன.

குன்னத்தூர்
குன்னத்தூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் செத்தன.
இதுபற்றி கூறப்படுவதாவது:-
தெருநாய்கள்
திருப்பூர் குன்னத்தூர் அருகே 16 வேலம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கருக்குபாளையம். இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்தக் குளம் 16 வேலம்பாளையம் ஊராட்சி, வெள்ளிரவெளி ஊராட்சி இரண்டுக்கும் சேர்ந்ததாகும். தற்போது மழை இல்லாததால் குளம் வறண்டு காணப்படுகிறது. 
இந்த குளத்திற்குள் பல தெருநாய்கள்  தினமும் வலம் வந்து கொண்டிருக்கிறது. குளத்தை சுற்றியுள்ள விவசாய தோட்டங்களில் அப்பகுதி விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கட்டி மேய்த்து வருகிறார்கள். அவ்வாறு தனியாக மேயும் ஆடுகளை, ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் சேர்ந்து கடித்து குதறி குடலை பிடிங்கி தின்று விடுகிறது. 
6 ஆடுகளை கடித்து குதறியது
சில நேரங்களில் ஆட்டின் உரிமையாளர் வந்துவிட்டால் கடித்து கொன்ற ஆடுகளை அப்படியே விட்டு விட்டு நாய்கள் ஓடி விடுகிறது.நேற்றுமுன்தினம் கருக்குபாளையத்தை சுற்றி உள்ள தோட்டங்களில் தனியாக மேய்ந்து கொண்டிருந்த 6 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறி உள்ளது.இ்தில் 6 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தன. 
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றித்திரியும் வெறிபிடித்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் இப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story