விவசாயிகள் மண்பரிசோதனை செய்ய விண்ணப்பிக்லாம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தகவல்


விவசாயிகள் மண்பரிசோதனை செய்ய விண்ணப்பிக்லாம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2021 12:47 AM IST (Updated: 9 Jun 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் மண்பரிசோதனை செய்ய விண்ணப்பிக்லாம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தகவல்

பொள்ளாச்சி

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆர்.சித்ராதேவி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மண்ணின் வளத்தை அறிந்து அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெற முடியும். 

கோவை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களிலும் மண்வள இயக்கம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு தலா 100 மண் மாதிரிகள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் 6,600 மண் மாதிரிகள் எடுக்கப் பட்டு மண் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை நடைபெறும். 

அதன் பிறகு விவசாயிகளுக்கு மண் வள அ ட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மண் மாதிரி சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

மண்பரிசோதனை செய்து உரமிட்டால் உரச்செலவை குறைப்பதுடன் அதிக மகசூலும் பெறலாம். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மண்பரிசோதனை செய்ய விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 


Next Story