மானூரில் காவலர் குடியிருப்பை திறக்க கோரிக்கை
மானூரில் காவலர் குடியிருப்பை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மானூர், ஜூன்:
நெல்லை மாவட்டம் மானூரில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 49 வீடுகள் என மொத்தமாக 52 வீடுகள் மற்றும் பம்ப் ஹவுஸ் என அனைத்து வசதிகளையும் உள்ளிட்ட கட்டிட பணிகள் நிறைவடைந்து சம்பந்தப்பட்ட காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் போலீசாரின் பயன்பாட்டுக்கு வராத நிலை தொடர்கிறது. இதனால் மானூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார், மானூரில் தங்கியிருந்து பணியாற்ற மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட காவல் அதிகாரிகள், மானூரில் கட்டிமுடிக்கப்பட்ட காவலர் குடியிருப்புகளை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாரும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story