புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2021 1:09 AM IST (Updated: 9 Jun 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூரு:

பெங்களூரு பாகலகுன்டே பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவரது மனைவி ஸ்வேதா (28). இந்த தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. தனியார் நிறுவனத்தில் ஊழியராக கிருஷ்ணமூர்த்தி வேலை செய்கிறார். 

திருமணமான புதிதில் இருந்தே ஸ்வேதாவிடம் வரதட்சணை கேட்டு கிருஷ்ணமூர்த்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி ஸ்வேதா கதறி அழுதார். 

இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியிடம் ஸ்வேதாவின் பெற்றோர் பேசி சமாதானப்படுத்தினார்கள். ஆனாலும் ஸ்வேதாவிடம் வரதட்சணை கேட்டு கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மனம் உடைந்த ஸ்வேதா தூக்குப்போட்டு தற்கொலை முயன்றார். 

அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்வேதா இறந்து விட்டார். தங்களது மகள் சாவுக்கு கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்றும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், ஸ்வேதா தற்கொலை செய்திருப்பதாக கூறி பாகலகுன்டே போலீஸ் நிலையத்தில் ஸ்வேதாவின் பெற்றோர் புகார் அளித்தனர். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story