மோதலில் ஈடுபட்ட 2 பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை
மோதலில் ஈடுபட்ட 2 பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.
பெங்களூரு:
மோதலில் ஈடுபட்ட 2 பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வேடிக்கை பார்த்தனர்
மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த ரோகிணி சிந்தூரி, மாநகராட்சி கமிஷனராக இருந்த ஷில்பா நாக் ஆகியோர் இடையே மோதல் நடந்ததை அடுத்து அவர்களை கர்நாடக அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது.
அந்த அதிகாரிகளுக்கு இடையே மோதலுக்கு பா.ஜனதா எம்.பி., ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் தான் காரணம். முதலில் ரோகிணி சிந்தூரியை பா.ஜனதாவின் பிரதாப்சிம்ஹா எம்.பி. ஆதரித்து பேசினார்.
பிறகு அவருக்கு எதிராக செயல்பட்டார். அந்த 2 அதிகாரிகளையும் மோதவிட்டு பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த சூழ்நிலையில் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி என்ன செய்தார். இது இந்த ஆட்சி நிர்வாகத்தின் தோல்வி இல்லையா?.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
பத்திகையாளர்கள் கூட்டத்தை கூட்டி பேச அந்த பெண் அதிகாரிக்கு அதிகாரம் கொடுத்தது யார்?. உரிய முன் அனுமதி பெறாமல் பத்திரிகையாளர்கள் கூட்டத்தை நடத்த முடியாது. பணி இடமாற்றம் என்பது தண்டனை அல்ல.
அதனால் அந்த 2 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தனது அதிகார பலத்தை இழந்துவிட்டது. அதனால் தான் அதிகாரிகள் வீதிக்கு வந்து சண்டை போடும் ஏற்பட்டுள்ளது.
நில முறைகேடு குறித்து நான் விசாரணை நடத்த முயற்சி செய்தேன். அதனால் தான் என்னை பணி இடமாற்றம் செய்துவிட்டனர் என்று ரோகிணி சிந்தூரி கூறியுள்ளார்.
அந்த நில முறைகேடு எது என்பது குறித்து விசாரணை நடைபெற வேண்டும். எந்தெந்த அரசியல்வாதிகள் நில முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அரசியல்வாதிகள்
மாநகராட்சி கமிஷனராக இருந்த ஷில்பா நாக்கை, மாவட்ட கலெக்டராக நியமிக்க முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சி தோல்வி அடைந்த பிறகு அந்த அதிகாரிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தினர்.
அரசியல்வாதிகள், அதிகாரிகளை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ கூடாது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story