சங்கரன்கோவில், சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சங்கரன்கோவில், சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2021 1:26 AM IST (Updated: 9 Jun 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில், சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவில், ஜூன்:
சங்கரன்கோவில், சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு கொரோனா தடுப்பூசியை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி ஆலையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், ஜி.எஸ்.டி. மூலம் கிடைக்கும் வருவாயை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். இதில் சமூக இடைவெளியை பின்பற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ஆறுமுகம், நெடுங்குளம் கிளைச் செயலாளர் ஸ்டீபன், பெரியூர் கிளைசெயலாளர் ராமர் மற்றும் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகிரி

சிவகிரியில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சென்ட்ரல் வங்கி முன்பாகவும், முன்னாள் கவுன்சிலர் அருணாச்சலம் தலைமையில் பஸ் நிலையம் அருகே காந்தி கலையரங்கம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story