முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
x
தினத்தந்தி 8 Jun 2021 8:28 PM (Updated: 8 Jun 2021 8:28 PM)
t-max-icont-min-icon

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன

வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காகிதபுரம் குடியிருப்பில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருத்திகையையொட்டி சுவாமிக்கு பால், பழம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி தேரில் அமர வைக்கப்பட்டு கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தது. இதேபோல புகழிமலை முருகன் கோவில், பவித்திரம் பாலமலை முருகன் கோவிலிலும் கிருத்திகையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


Next Story