கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அரியலூர்:
பலி எண்ணிக்கை உயர்வு
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 145 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,039 ஆக உயர்ந்துள்ளது.
இதில் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 144 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
1,768 பேருக்கு சிகிச்சை
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 11,117 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது மொத்தம் 1,768 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
நேற்று மொத்தம் 1,046 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தம் 59 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story