வில்லேந்தி வேலவருக்கு விபூதி அலங்காரம்


வில்லேந்தி வேலவருக்கு விபூதி அலங்காரம்
x
தினத்தந்தி 9 Jun 2021 2:15 AM IST (Updated: 9 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவிலில் வில்லேந்தி வேலவருக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கோவிலின் கருவறைக்கு பின்புறம் உள்ள வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு, வைகாசி கார்த்திகையை முன்னிட்டு சந்தனாதி தைலம், மஞ்சள்பொடி, மாப்பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திருமஞ்சனங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து வில்லேந்தி வேலவருக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டு, பட்டு வஸ்திரம் அணிந்து காட்சி தந்தார். கோவில் ஓதுவார்கள், கொரோனா தொற்றில் இருந்து உலகம் மீள பக்தி பாடல்களை ஓதினர். பின்னர் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பூஜைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story