முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஆணையாளர் முகமது சாகுல்ஹமீது ஆலோசனையின் பேரில் கொரோனா பரிசோதனை முகாம், தடுப்பூசி போடும் முகாம், நகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, துப்புரவு பணி போன்ற பணிகள் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மளிகை கடை, காய்கறி கடை, ஓட்டல்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா? என்பதனை ஆய்வு செய்து, முக கவசம் அணியாதவர்கள் 11 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் வெளியூரில் இருந்து நகருக்குள் வந்த 73 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story