பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது


பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2021 5:28 AM IST (Updated: 9 Jun 2021 5:28 AM IST)
t-max-icont-min-icon

பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது.

ஆலந்தூர்,

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய முழுஊரடங்கை அறிவித்து மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறது. இந்தநிலையில் சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்கள் சுமார் 15 பேருடன் ஒன்று கூடி நடுரோட்டில் பட்டா கத்தியால் கேக்கை வெட்டி கொண்டாடி உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இது தொடர்பா போலீசார் விசாரித்ததில், கண்ணகி நகரை சேர்ந்த சுனில்குமார் (வயது 18) என்பவர் பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுடன் பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் குமார் (18), அவரது நண்பர்கள் நவீன்குமர் (20), அப்பு (29), தினேஷ் (18), ராஜேஷ் (19), கார்த்திக் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பட்டா கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

Next Story