சினிமாவை மிஞ்சம் காட்சி வயிற்றில் குத்தப்பட்ட கத்தியுடன் போலீஸ் நிலையம் வந்த வாலிபர் 9 பேர் கைது


சினிமாவை மிஞ்சம் காட்சி வயிற்றில் குத்தப்பட்ட கத்தியுடன் போலீஸ் நிலையம் வந்த வாலிபர் 9 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2021 11:01 AM IST (Updated: 9 Jun 2021 11:01 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூரில் வயிற்றில் குத்தப்பட்ட கத்தியுடன் போலீஸ் நிலையம் வந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாக்பூர்,

நாக்பூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் வந்தார். வயிற்றில் கத்தி சிக்கி இருந்ததை கண்ட போலீசார் உடனே வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 20 வயதான அந்த வாலிபரை பிடித்து கும்பல் தாக்கியுள்ளது.

அங்கிருந்து அவர் தப்பிச்சென்ற போது கும்பலை சேர்ந்த ஒருவர் வாலிபரின் வயிற்றில் கத்தியால் குத்தினார். இருப்பினும் அந்த வாலிபர் குத்தப்பட்ட கத்தியுடன் அங்கிருந்து தப்பி 500 மீட்டர் தொலைவில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு நடந்தே தப்பி ஓடினார்.

அப்போது அந்த வழியாக வந்த நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்தது தெரியவந்தது. இது சினிமா பட காட்சியை மிஞ்சும் வகையில் இருந்தது. மேலும் இது சாலையில் சென்றவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கொல்ல முயன்ற 9 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story