300 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்


300 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்
x

மாற்றுத்திறனாளிகள், துப்புரவு பணியாளர்கள் என 300 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களை போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா வழங்கினார்.

கொடைரோடு:

அம்மையநாயக்கனூர் போலீசார் மற்றும் கொடைரோடு வர்த்தக சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கொடைரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா தலைமை தாங்கி அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி பேசினார்.

அவர் பேசும்போது, கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முதியோர் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டு கொள்வதால் எவ்வித பாதிப்பும் இல்லை. உயிரிழப்பு ஏற்படுதை தடுப்பூசி தடுக்கிறது. அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், துப்புரவு பணியாளர்கள் உட்பட 300 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு, காய்கறிகள், சப்போட்டா பழம், பிரட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன. 

நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் டேவிட் மற்றும் கொடைரோடு வர்த்தக சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Next Story