கோவில்பட்டியில், வெளியில் காரணமின்றி சுற்றிய 184 பேருக்கு கொரோனா பரிசோதனை

கோவில்பட்டியில், வெளியில் காரணமின்றி சுற்றிய 184 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 9 Jun 2021 8:33 PM IST (Updated: 9 Jun 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், வெளியில் காரணமின்றி சுற்றிய 184 பேருக்கு கொரோனா பரிசோதனை

கோவில்பட்டி:
கோவில்பட்டி கொரோனா முழுஊரடங்கின் விதிமுறைகளை மீறி காரணமில்லாமல் பலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதை தடுக்க நகராட்சி, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்றும் ராமசாமி பூங்கா எதிரில் காவல்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்து கொரோனா சளி மாதிரி எடுக்கும் முகாம் நடத்தினர். இந்த வகையில், காரணமின்றி வாகனங்களில் சுற்றிவந்த 184 பேருக்கு  டாக்டர் மனோஜ் தலைமையில் மருத்துவக் குழுவினர் சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Next Story