மாவட்ட செய்திகள்

காயல்பட்டினத்தில் புகையிலை விற்ற பெட்டிக் கடைக்காரர் கைது + "||" + shopkeeper arrested for selling tobacco in kayalpattinam

காயல்பட்டினத்தில் புகையிலை விற்ற பெட்டிக் கடைக்காரர் கைது

காயல்பட்டினத்தில் புகையிலை விற்ற பெட்டிக் கடைக்காரர் கைது
காயல்பட்டினத்தில் புகையிலை விற்ற பெட்டிக் கடைக்காரர் கைது செய்யப்பட்டார்
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் கூலக் கடை பஜாரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் அந்தோணி சார்லஸ் விஜயராஜ் (வயது 40).  இவரது கடையில் புகையிலை விற்பனை செய்வதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் அந்த கடையில் சோதனை செய்தனர். கடையிலிருந்து 456 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக அந்தோணி சார்லஸ் விஜயராஜை போலீசார் கைது செய்தனர்.