மாவட்ட செய்திகள்

கயத்தாறில்கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபெண் விபத்தில் சிக்கி பலி + "||" + in kayatharu, women killed in motorcycle accident

கயத்தாறில்கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபெண் விபத்தில் சிக்கி பலி

கயத்தாறில்கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபெண் விபத்தில் சிக்கி பலி
கயத்தாறில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்றபோது சேலை சக்கரத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்றபோது சேலை சக்கரத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் பலியானார்.
கணவன், மனைவி
கயத்தாறை சேர்ந்தவர் அங்குசாமி. இவரது மனைவி லட்சுமி(வயது50). விவசாயி. இருவரும் கோவில்பட்டி மந்தித் தோப்புக்கு சென்றனர்.
சம்பவத்தன்று அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் கயத்தாறில் உள்ள வீட்டிற்கு நாற்கர சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். 
விபத்தில் சிக்கினர்
அப்போது நாற்கர சாலையில் கரிசல்குளம் விலக்கு பகுதியில் வந்தபோது,  திடீரென லட்சுமியின் சேலை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் இருவரும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்குசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
பெண் சாவு
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று லட்சுமி பலியானார். இறந்துபோன லட்சுமிக்கு காளிராஜ், சொர்ணராஜ், மகேந்திரன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். 
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.