மரங்களுக்கு சரணாலயம்


மரங்களுக்கு சரணாலயம்
x
தினத்தந்தி 9 Jun 2021 4:05 PM GMT (Updated: 9 Jun 2021 4:05 PM GMT)

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மரங்களுக்கு சரணாலயம் அமைக்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பரமக்குடி, 
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மரங்களுக்கு சரணாலயம் அமைக்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

அழிவின் விளிம்பில்

பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரிய வகை மரங்களின் சரணாலயம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் அழிந்து வரும் மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் மஞ்சள் கடம்பு, ருத்ராட்சம், இலுப்பை, பூ மருது, பதிமுகம், கள்ளிமந்தாரை, பன்னீர் இலுப்பை உள்பட அழிவின் விளிம்பில் உள்ள 133 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. 
இதை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார். இதில் சப்-கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாவட்ட வன அலுவலர் அருண்குமார், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிந்தாமணி முத்தையா, துணைத் தலைவர் சரயுராஜேந்திரன், உரப்புளி ஊராட்சி தலைவர் நாகலட்சுமி, ரவீந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மரக்கன்றுகள்

இந்தத் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்தப் பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

Next Story