மாவட்ட செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது + "||" + 14 arrested for gambling

பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது
திண்டுக்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், சுப்பிரமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று பழனி பைபாஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, முத்தழகுபட்டி அருகே காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பூதிபுரத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 32), சின்னபள்ளபட்டியை சேர்ந்த முத்துக்குமார் (21), முத்தழகுபட்டியை சேர்ந்த முத்து விக்னேஷ் (27), கோவிந்தாபுரத்தை சேர்ந்த உதுமான்அலி (51), பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் (42), ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த ராமன் (61) உள்பட 14 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 

மேலும் அவர்களிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்கள், ரூ.7 ஆயிரத்து 200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.