127 பேருக்கு கொரோனா


127 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Jun 2021 10:02 PM IST (Updated: 9 Jun 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் 127 பேருக்கு ெகாரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 127 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 18 ஆயிரத்து 316 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
நேற்று சிகிச்சை முடிந்து 148 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 15 ஆயிரத்து 494 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2 ஆயிரத்து 535 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 287 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
2 பேர் பலி

இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story