விழுப்புரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி


விழுப்புரம் மாவட்டத்தில்  கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jun 2021 4:33 PM GMT (Updated: 9 Jun 2021 4:33 PM GMT)

4 பேர் பலி

விழுப்புரம், 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் இதுவரை 12 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த திண்டிவனம் வடசிறுவலூரை சேர்ந்த 55 வயது நபர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானூரை சேர்ந்த 30 வயது வாலிபரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனம் வகாப் நகரை சேர்ந்த 65 வயதுடைய முதியவரும், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பிய விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த 52 வயதுடைய நபரும் இறந்தார்.
இவர்களில் திண்டிவனம் வகாப் நகரை சேர்ந்தவருக்கு மட்டும் கருப்பு பூஞ்சைக்கான அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 
மேலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 8 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 8 பேருக்கும் உரிய சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story