ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
ஊராட்சி தலைவரிடம் சாதி ரீதியாக பாகுபாடு காட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
கலசபாக்கம்
ஊராட்சி தலைவரிடம் சாதி ரீதியாக பாகுபாடு காட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
ஊராட்சி தலைவர்
புதுப்பாளையம் ஒன்றியம் கல்லரப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக ஏழுமலை பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஊராட்சி செயலாளர் வேல்முருகனுக்கும் நிர்வாக ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.
இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை கலெக்டரிடம் புகார் அளித்தார். அதில் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தன்னை தரக்குறைவாக நடத்துவதாகவும், சாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரணை செய்வதற்காக அதிகாரியை கலெக்டர் சந்தீப் நந்தூரி அனுப்பி வைத்திருந்தார்.
பணியிடை நீக்கம்
விசாரணை அறிக்கையை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story