வேலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 102 பேர் சிகிச்சை


வேலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 102 பேர் சிகிச்சை
x
தினத்தந்தி 9 Jun 2021 10:18 PM IST (Updated: 9 Jun 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்களை மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது.

 ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், பிற மாவட்டம், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பாதிப்பு எண்ணிக்கை 79 ஆக இருந்தது. ஆனால் தற்போது இங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் போன்று கருப்பு பூஞ்சை நோயும் மக்களை அச்சுறுத்துகிறது. 

இந்த நோய் பாதித்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, பாதிப்பின் தீவிரம் குறித்து கண்காணிக்கப்படுகிறது.

 இதுவரை மாவட்டத்தில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்.

Next Story