மாவட்ட செய்திகள்

பாலித்தீன் மூலம் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு ஏற்பாடு + "||" + polithin

பாலித்தீன் மூலம் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு ஏற்பாடு

பாலித்தீன் மூலம் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு ஏற்பாடு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாலித்தீன் மூலம் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கடை உரிமையாளர்கள் பலர் செய்துள்ளனர்.
திருப்பூர்
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாலித்தீன் மூலம் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கடை உரிமையாளர்கள் பலர் செய்துள்ளனர்.
பாலித்தீன் மூலம்...
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தையே நெருங்கி வருவதால் பலரும் அச்சமடைந்துள்ளனர். தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் காரணமாக மளிகை, கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது.
அதன்படி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்களிடம் இருந்து கொரோனா பரவாமல் இருக்கும் வகையிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பல்வேறு கடை உரிமையாளர்கள் பாலித்தீன் மூலம் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி கடையின் முன்பகுதியில் பாலித்தீனை முழுவதுமாக போர்த்தியபடி அமைத்துள்ளனர்.
ஆட்டோ
மேலும், பொதுமக்கள் தேவையான பொருட்களை தேர்வு செய்த பின்னர், அதனை பாலித்தீன் பைகளை அகற்றியபடி ஒருபுறமாக வழங்குகிறார்கள். இதன் மூலம் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். மேலும், தூசியும் படியாமல் இருக்கும் எனவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ஆட்டோ டிரைவர்கள் பலரும் இதுபோன்று ஆட்டோக்களில் செய்துள்ளனர். அதாவது டிரைவருக்கு பின்புறம் பாலித்தீன் மூலம் முழுவதுமாக மூடியுள்ளனர். இதற்கு பின்னால் பயணிகள் இருக்கிறார்கள். இதன் மூலம் டிரைவர்கள் பாதுகாப்பாகவும், பயணிகள் பாதுகாப்பாகவும் இருக்கும் நிலையை பல ஆட்டோ டிரைவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.