மாவட்ட செய்திகள்

2 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன + "||" + close

2 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன

2 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன
உடுமலை நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் 2 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.
உடுமலை
உடுமலை நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்டதால் 2 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.
17 பேருக்கு கொரோனா
உடுமலை நகராட்சி பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடுமலை நகராட்சி பகுதியில் ஒரே வீதியில் 3 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்த வீதி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு வருகிறது.
2 வீதிகள் அடைப்பு
அதன்படி நேற்று முன்தினம் உடுமலை பழனியாண்டவர் நகரில் ஒரே வீதியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டதால் அந்தவீதி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. இதேபோன்று உடுமலை நகராட்சி பகுதிக்குட்பட்ட டி.வி.பட்டிணத்தில் ஒரே வீதியில் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த வீதியும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. அத்துடன் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நகராட்சி ஆணையாளர் தே.கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் டாக்டர் கே.கவுரிசரவணன், சுகாதார ஆய்வாளர்கள் பி.செல்வம், ராஜ்மோகன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மேலும் தடுப்புகள் வைத்துஅடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு, அவர்களுக்குத்தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சிஅதிகாரிகள் தெரிவித்தனர்.