ஒற்றை யானை துரத்தியதால் விவசாயி கீழே விழுந்து படுகாயம்
ஒற்றை யானை துரத்தியதால் விவசாயி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47), விவசாயி. இவர், நேற்று முன்தினம் ஆந்திர மாநில வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள அவருக்கு சொந்தமான மாந்தோப்பில் காவலுக்கு சென்றுள்ளார். நள்ளிரவில் மாந்தோப்பு வழியாக ஒற்றை யானை பிளறியபடி வந்துள்ளது.
யானையின் சத்தத்தை கேட்ட ரமேஷ் அங்கிருந்து தப்பிக்க முயன்று உள்ளார். அப்போது யானை, ரமேசை துரத்தியதால் கீழே விழுந்த படுகாயம் அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து மாந்தோப்பில் காவலுக்கு இருந்தவர்கள் ஓடி வரவே ஒற்றை யானை அங்கிருந்து தப்பி ஓடியது.
இதனையடுத்து படுகாயம் அடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை மீண்டும் அந்த ஒற்றை யானை கொத்தூர் கிராமம் அருகே வந்துள்ளது. கிராம மக்கள் உதவியுடன் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
Related Tags :
Next Story