குமரியில் பரவலாக மழை


குமரியில் பரவலாக மழை
x
தினத்தந்தி 9 Jun 2021 11:33 PM IST (Updated: 9 Jun 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பெய்த மழை அதிகபட்சமாக அடையாமடையில் 62 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பெய்த மழை அதிகபட்சமாக அடையாமடையில் 62 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
மழை
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி இருந்தாலும் கடந்த ஓரிரு தினங்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த மழை அதிகபட்சமாக அடையாமடையில் 62 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-32.2, பெருஞ்சாணி-4, சிற்றார் 1-38, சிற்றார் 2-37, மாம்பழத்துறையாறு-15, நாகர்கோவில்-9.8, பூதப்பாண்டி-11.4, சுருளோடு-11.2, கன்னிமார்-31.2, ஆரல்வாய்மொழி-3.6, பாலமோர்-22.4, நிலப்பாறை-7, ஆனைகிடங்கு-13.4, கோழிப்போர்விளை-13, முள்ளங்கினாவிளை-5, புத்தன்அணை-3.4, திற்பரப்பு-20 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
அணைகளுக்கு நீர்வரத்து
மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 875 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு 631 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் பெருஞ்சாணி அணையில் இருந்து 404 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சிற்றார்-1 அணையில் இருந்து 537 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Next Story